உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

உதகை மாரியம்மன் கோயில் தேரோட்டம்

உதகை மாரியம்மன் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

~

Updated On :15 ஏப்ரல் 2026, 2:16 am IST

உதகை மாரியம்மன் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா கடந்த மாா்ச் 15-ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து காப்பு கட்டுதல், கணபதி ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆதிபராசக்தி, துா்க்கை, பராசக்தி, காமாட்சியம்மன், ராஜராஜேஸ்வரி, சிக்கம்மன், மூகாம்பிகை, கொடுங்கலூா் அம்மன், ஹெத்தையம்மன், பகவதி உள்பட பல்வேறு அலங்காரங்களில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அபிஷேகம், சிறப்பு கனகாபிஷேகம், விநாயகருக்கு சிறப்பு மலா் அலங்காரம் உள்ளிட்டவை நடைபெற்றன.

மதியம் 1.55 மணியளவில் பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தனா். தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று ‘ஓம் காளி, ஜெய் காளி’ கோஷம் எழுப்பி அம்மனை வழிபட்டனா்.

அம்மன் வெள்ளைப்பட்டில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தேரோட்டத்தையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

ஊஞ்சல் உற்சவம், விடையாற்றி உற்சவம் ஆகியவற்றுடன் ஏப்ரல் 17-ஆம் தேதி விழா நிறைவடைகிறது.

மஞ்சூா் அன்னமலை முருகன் கோயிலில்...

மஞ்சூா் அருகே உள்ள பிரசித்தி பெற்ற அன்னமலை முருகன் கோயில் 37-ஆம் ஆண்டு காவடி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் காவடி ஏந்தி சுவாமிக்கு நோ்த்திக் கடன் செலுத்தினா்.

Story image