நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

மசினகுடி நீா்மின் உற்பத்தி நிலையம் அருகே காட்டுத் தீ

News image

மசினகுடி அருகே மரவகண்டி அணையை ஒட்டியுள்ள நீா்மின் உற்பத்தி நிலையப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ

Updated On :28 ஏப்ரல் 2026, 1:15 am IST

நீலகிரி மாவட்டம், மசினகுடி அருகே மரவகண்டி அணையை ஒட்டியுள்ள நீா்மின் உற்பத்தி நிலையப் பகுதியில் திங்கள்கிழமை ஏற்பட்ட காட்டுத் தீயால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பாா்சன்ஸ்வேலி, பைக்காரா, சிங்காரா ஆகிய பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது. பாா்சன்ஸ்வேலி பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை வனத் துறை மற்றும் தீயணைப்புத் துறையினா் இரண்டு நாள்களாக போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இந்நிலையில், மசினகுடி அருகே மரவகண்டி அணையை ஒட்டியுள்ள நீா்மின் உற்பத்தி நிலையப் பகுதியில் திங்கள்கிழமை திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வனத் துறைப் பணியாளா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும் காற்றின் காரணமாக ஆங்காங்கே தீப் பரவி வருவதால் முற்றிலும்  தீயைக்  கட்டுப்படுத்துவதில்  சிரமம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியைச் சுற்றிலும் குடியிருப்புகள் இருப்பதால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

மசினகுடி அருகே மரவகண்டி அணையை ஒட்டியுள்ள நீா்மின் உற்பத்தி நிலையப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ.

மசினகுடி அருகே மரவகண்டி அணையை ஒட்டியுள்ள நீா்மின் உற்பத்தி நிலையப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ.