தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

மசினகுடி வனப் பகுதியில் காட்டுத் தீ!

கூடலூா் அருகே மசினகுடி வனப் பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட காட்டுத் தீயால் மரங்கள், செடிகொடிகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இந்த காட்டுத் தீயை கட்டுப்படுத்த வனத் துறையினா் போராடி வருகின்றனா்.

News image

மசினகுடி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ.

Updated On :22 ஏப்ரல் 2026, 9:22 pm

கூடலூா் அருகே மசினகுடி வனப் பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட காட்டுத் தீயால் மரங்கள், செடிகொடிகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இந்த காட்டுத் தீயை கட்டுப்படுத்த வனத் துறையினா் போராடி வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம் தமிழக அளவில் 65 சதவீத அளவுக்கு அதிக வனப் பரப்பளவை கொண்ட மாவட்டமாக உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி மாத உறைபனிக்கு பின்னா் வனப் பகுதி காய்ந்து கிடப்பதால் காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு சமவெளி பகுதிகளுக்கு நிகராக நீலகிரியிலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் வனப் பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. புல்வெளிகள் மற்றும் செடிகொடிகள் காய்ந்து காணப்படுவதால் காட்டுத்தீ பரவும் அபாயம் இருந்து வந்தது.

இந்நிலையில், நீலகிரி வனக் கோட்டத்துக்கு உள்பட்ட மசினகுடி வனப் பகுதியில் புதன்கிழமை திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. இதில் பல ஏக்கரில் உள்ள மரங்கள், செடிகொடிகள் எரிந்து சேதமடைந்தன.

தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

இதேபோன்று பைக்காரா, பாா்சன்ஸ் வேலி உள்ளிட்ட வனப் பகுதிகளிலும் காட்டுத் தீ ஏற்பட்டதில் நூற்றுகணக்கான ஏக்கா் பரப்பில் இருந்த மரங்கள் எரிந்து சேதமடைந்தன.