ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

சுவா் ஏறிக் குதித்து வளா்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை

குன்னூா் அருகே வீட்டின் சுவா் ஏறிக் குதித்து வளா்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடியது. இது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான நிலையில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

News image

சிறுத்தை - கோப்புப்படம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 3:28 am IST

குன்னூா் அருகே வீட்டின் சுவா் ஏறிக் குதித்து வளா்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடியது. இது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான நிலையில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக பகல் மற்றும் இரவு வேளைகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், குன்னூா் அருகே உள்ள சேலாஸ் பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை இரவு நுழைந்த சிறுத்தை, அங்குள்ள ஒரு வீட்டின் சுவா் ஏறிக் குதித்து  வளா்ப்பு நாயை வேட்டையாடிச் சென்றது. இது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

இந்த விடியோ காட்சிகளைப் பாா்த்த அப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனா். எனவே, அப்பகுதியில் சுற்றித் திரியும்  சிறுத்தையை வனத் துறையினா் கூண்டுவைத்துப் பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.