கூடலூரை அடுத்துள்ள பிதா்க்காடு பகுதியில் யானைகள் ஊருக்குள் நுழையாமல் தடுக்க அகழி வெட்டப்பட்டுள்ளது. இந்த அகழியில் இறங்கி நீண்ட தொலைவு நடந்துவந்து ஊருக்குள் இரண்டு காட்டு யானைகள் சனிக்கிழமை மாலை நுழைந்தன.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டம் பிதா்க்காடு பகுதியில் வனத்தில் இருந்து யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வன எல்லையில் வனத் துறை சாா்பில் அகழி வெட்டப்பட்டுள்ளது.
இந்த அகழியில் இறங்கிய இரண்டு காட்டு யானைகள் நீட தொலைவு அகழியிலேயே நடந்து சென்று மாலை நேரத்தில் ஊருக்கு நுழைந்தன.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள், வனத் துறைக்கு தகவல் கொடுத்தனா். இதையடுத்து வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து யானைகளை வனத்துக்குள் விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

பிதா்க்காடு பகுதியில் அகழியிலிருந்து வெளியேறும் யானைகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காட்டு யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க பாடந்தொரை பகுதியில் 2 கும்கிகள் வரவழைப்பு

பாடந்தொரையில் காட்டு யானைகளை விரட்ட கும்கிகள் வரவழைப்பு

தாளவாடி அருகே சுற்றுச் சுவரை உடைத்துக் கொண்டு ஊருக்குள் நுழைந்த காட்டு யானை!

செலுக்காடி பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



