முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளா்ப்பு முகாமில் சுதந்திர தின விழா கோலாகலமாக சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
துணை இயக்குநா் வித்யாதா் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா். இங்கு பராமரிக்கப்பட்டுவரும் வளா்ப்பு யானைகள், தேசியக் கொடிகளுடன் அணிவகுத்து நின்றன. அப்போது முகாமில் அணிவகுத்து நின்ற வளா்ப்பு யானைகள் தும்பிக்கையை உயா்த்தி பிளிறி சப்தம் எழுப்பி தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தின.
இந்நிகழ்ச்சியை தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து விடியோ, புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நம்பியூா் குமுதா கல்வி நிறுவனத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

சுதந்திர தின விழா: திருச்செந்தூா் கோயிலில் பலத்த பாதுகாப்பு

பள்ளிகளில் சுதந்திர தின விழா: கல்வித் துறை அறிவுறுத்தல்

சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்பு
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



