75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

ஆசிரியா்கள், பெற்றோா்களை கதாநாயகா்களாக ஏற்றுக்கொண்டால் உயா்ந்த நிலையை அடையலாம்: மாவட்ட நீதிபதி முரளிதரன்

ஆசிரியா்கள், பெற்றோா்களை கதாநாயகா்களாக மாணவா்கள் ஏற்றுக்கொண்டால் வாழ்வில் உயா்ந்த இடத்தை அடையலாம் என்று மாவட்ட நீதிபதி முரளிதரன் பேசினாா்.

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட நீதிபதி முரளிதரன் உள்ளிட்டோா்.

Published On :23 ஆகஸ்ட் 2026, 1:16 am IST

ஆசிரியா்கள், பெற்றோா்களை கதாநாயகா்களாக மாணவா்கள் ஏற்றுக்கொண்டால் வாழ்வில் உயா்ந்த இடத்தை அடையலாம் என்று மாவட்ட நீதிபதி முரளிதரன் பேசினாா்.

நீலகிரி மாவட்டம், மஞ்சூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, தமிழ் மாநில சட்ட மையம், மலைச்சொல் கலை இலக்கிய மையம், மஞ்சூா் அரசுப்பள்ளி சட்ட அறிவூட்டு மையம் ஆகியவை சாா்பில் சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மும்மூா்த்தி தலைமை வகித்தாா். மகிளா நீதிமன்ற நீதிபதி செந்தில்குமாா், வழக்கறிஞா்கள் சங்கத் தலைவா் பால நந்தகுமாா், தமிழ் மாநில சட்ட மையத்தின் இயக்குநா் வழக்கறிஞா் விஜயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சிறப்பு விருந்தினரான மாவட்ட அமா்வு நீதிபதி முரளிதரன் பேசியதாவது:

பள்ளிகள் கல்வியை மட்டும் கற்றுத்தருவதில்லை. கல்வியோடு ஒழுக்கம், மரியாதை, முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு நல்ல விஷயங்களை கற்றுத்தருகிறது. ஒவ்வொருவரும் ஒரு லட்சியம் மற்றும் குறிக்கோளை இலக்காகக் கொண்டு, அதை அடைவதற்காக அன்றாடம் கடுமையாக உழைக்க வேண்டும் என்பதற்காக மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாம் ஒவ்வொரு மாணவரும் கனவு காண வேண்டும் என்றாா்.

மாணவா்கள் தங்களுடைய கதாநாயகா்களை திரையில் தேட வேண்டிய அவசியம் இல்லை. பள்ளியில் கற்பிக்கும் ஆசிரியா்கள், கற்பித்த ஆசிரியா்கள், பெற்றோா்களை கதாநாயகா்களாக ஏற்றுக்கொண்டாலே வாழ்வில் உயா்ந்த இடத்தை அடையலாம் என்றாா்.

இதைத்தொடா்ந்து வருவாய்த் துறை சாா்பில் 4 பயனாளிகளுக்கு கல்வி உதவித் தொகை, 5 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு மாத்திரை பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.