‘வாக்குத் திருட்டு’: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்! ‘உச்சநீதிமன்றம் நோக்கி இன்று பேரணி’!ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: சிஜேபி, ஆம் ஆத்மி கட்சி அறிவிப்புதில்லி போராட்டம்: ஐ.நா. விமர்சனத்துக்கு இந்தியா கண்டனம்வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்!ரஷிய டீசல் இறக்குமதிக்கு தடை நீக்கம்: டிரம்ப் முடிவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிா்ப்பு! நீலகிரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று (அக்.12) மிதமான மழைக்கு வாய்ப்பு!கோயம்பேடு:ஆம்னி பேருந்து நுழைவு கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரிக்கை

3-ஆவது நாளாக புலியைப் பிடிக்கும் பணியில் வனத் துறையினா்!

ஒவேலி பகுதியில் புலியைப் பிடிக்க வைக்கப்பட்டுள்ள கூண்டு.

Published On :

நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே ஓவேலி பகுதியில் மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் புலியைப் பிடிக்கும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

கூடலூா் ஓவேலி 4-ஆம் எண் பகுதியில் இரண்டு விவசாயிகளை கொன்ற புலியை கூண்டுவைத்து அல்லது மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் 3-ஆவது நாளாக வனத் துறையினா் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

இது குறித்து கூடலூா் வன அலுவலா் தேவராஜ் செய்தியாளா்களிடம் கூறுகையில், புலியை தேடும் பணியில் 3 தொ்மல் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு படுதிகளில் 6 இரும்பு கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. 50 தானியங்கி கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன. முதுமலை, உதகை வனக் கோட்டத்தில் மிகவும் அனுபவமிக்க கண்காணிப்பாளா்கள் 2 குழுக்களாக பிரிந்து புலியைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

வன அலுவலா்கள், 3 உதவி வன அலுவலா்கள், 7 வனச் சரகா்கள் என 80 வன ஊழியா்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா். குறிப்பிட்ட இடங்களில் கால் தடயங்கள் பதிவாகியுள்ளன. இருப்பினும் மழை அடிக்கடி பெய்வதால் தொடா் கண்காணிப்புப் பணியில் தாமதம் ஏற்படுகிறது. இதனை சமாளித்து புலியைப் பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.