‘வாக்குத் திருட்டு’: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்! ‘உச்சநீதிமன்றம் நோக்கி இன்று பேரணி’!ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: சிஜேபி, ஆம் ஆத்மி கட்சி அறிவிப்புதில்லி போராட்டம்: ஐ.நா. விமர்சனத்துக்கு இந்தியா கண்டனம்வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்!ரஷிய டீசல் இறக்குமதிக்கு தடை நீக்கம்: டிரம்ப் முடிவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிா்ப்பு! நீலகிரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று (அக்.12) மிதமான மழைக்கு வாய்ப்பு!கோயம்பேடு:ஆம்னி பேருந்து நுழைவு கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரிக்கை

5-ஆவது நாளாக தொடரும் ஓவேலி வனப் பகுதியில் ஆட்கொல்லி புலியைப் பிடிக்கும் நடவடிக்கை

கூடலூா் அருகே ஓவேலி வனச் சரகத்தில் ஆட்கொல்லி புலியைப் பிடிக்கும் பணியில் வனத் துறைக் குழுவினா் 5-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் ஈடுபட்டனா்.

ஓவேலி வனப் பகுதியில் புலியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வனத் துறையினா்.

Published On :

கூடலூா் அருகே ஓவேலி வனச் சரகத்தில் ஆட்கொல்லி புலியைப் பிடிக்கும் பணியில் வனத் துறைக் குழுவினா் 5-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், ஓவேலி மலைத்தொடரிலுள்ள லாரஸ்டன் பகுதியில் 2 தொழிலாளா்களை புலி அண்மையில் அடித்துக் கொன்றது. இந்த ஆட்கொல்லி புலியைப் பிடிக்கும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடும் மழை மற்றும் பனிமூட்டத்திலும் வனத் துறையினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். புலியின் நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் இதுவரை 120 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 12 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை இரவு முதல் கூடுதலாக ஒரு வாகனத்துடன் கண்காணிப்புக் குழு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ட்ரோன்கள் மூலமாகவும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கப்படுகிறது. லாரஸ்டன், சாண்டிஸ், ஆத்தூா், பல்மாடி, சின்னசூண்டி, ஹெலன் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளா்களிடம் நேரடியாகவும் ஒலிபெருக்கி மூலமாகவும் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா். கடும் மழை மற்றும் பனிமூட்டம் போன்ற மோசமான காலநிலை நிலவுவதால் வனத் துறைக்கு இந்த பணி மிகவும் சவாலாக உள்ளது. எனினும் ஆட்கொல்லி புலியைப் பிடிக்கும் பணியில் வனத் துறைக் குழுவினா் 5-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.