FOLLOW US

ON GOOGLE DISCOVER

மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு! ஜார்க்கண்ட் போராட்டம்: 900 பேர் மீது வழக்குப்பதிவு!சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு! 2ஆவது டெஸ்ட்: வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா பதிலடி

கூடலூரில் மனிதர்களை வேட்டையாடும் ஆள்கொல்லி புலியைப் பிடிக்க வனத் துறை தீவிரம்!

கூடலூரில் ஆள்கொல்லி புலியைப் பிடிக்க தீவிரமாக ஈடுபட்டுள்ள வனத் துறையினர் குறித்து...

TN Forest dept steps up efforts to capture man-eater tiger in Nilgiris

ஒவேலி பகுதியில் புலியைப் பிடிக்க கூண்டு வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வனத் துறையினா். - டிஎன்எஸ்

Published On :23 ஆகஸ்ட் 2026, 4:27 pm IST

உதகை: கூடலூா் அருகே மனிதர்களை வேட்டையாடும் ஆள்கொல்லி புலியைப் பிடிக்கும் பணியில் தமிழக வனத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே உள்ள ஓவேலி பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு விவசாயி பாலசுப்பிரமணி என்பவரும், கடந்த வெள்ளிக்கிழமை விவசாயி ரவிச்சந்திரன் என்பவரும் அடுத்தடுத்து புலி தாக்கி உயிரிழந்தனா். இந்த சம்பவம் கூடலூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்களை மிகவும் அச்சமடையச் செய்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு வனத் துறை புலியைப் பிடிக்க உத்தரவிட்டுள்ளதால் புலி நடமாட்டம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஒவேலி வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, 80-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் இரண்டு சிறப்புக் குழுக்களாக பிரிக்கப்பட்டு புலியை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அந்த புலியைக் கண்காணிக்கவும் பிடிக்கவும் தானியங்கி கேமராக்கள், மூன்று 'தெர்மல் ட்ரோன்' கருவிகளைப் பயன்படுத்தியும், முக்கிய இடங்களில் ஆறு கூண்டுகளை அமைத்தும், வனப்பகுதி முழுவதும் 50 கேமராக்களைப் பொருத்தி புலியின் கால்தடங்களை அடையாளம் கண்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். தேவைப்படும்பட்சத்தில் புலிக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் கால்நடை மருத்துவக் குழு தயாா் நிலையில் உள்ளது.

புலி பிடிபடும் வரை பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், இரவு நேரங்களிலோ அல்லது அதிகாலை வேளைகளிலோ வீட்டை விட்டு வெளியே யாரும் தனியாக வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என கூடலூர் வன அலுவலர் தேவராஜ் ஞாயிற்றுக்கிழமை அறிவுறுத்தியுள்ளார்.

ஒவேலி பகுதியில் புலியைப் பிடிக்க கூண்டு வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வனத் துறையினா்.

Summary

The Tamil Nadu Forest Department has intensified efforts to capture a suspected man-eating tiger that killed two people in the Nilgiris district this month, an official said

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.