தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

புலியைப் பிடிக்கும் பணியில் கும்கி யானை

கூடலூா் அருகே ஆட்கொல்லி புலியைப் பிடிக்க கும்கி யானை உதவியுடன் 9-வது நாளாக வனத் துறையினா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

ஓவேலி பகுதியில் கும்கி யானை உதவியுடன் புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள வனத் துறையினா்.

Published On :

கூடலூா் அருகே ஆட்கொல்லி புலியைப் பிடிக்க கும்கி யானை உதவியுடன் 9-வது நாளாக வனத் துறையினா் சனிக்கிழமை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே உள்ள ஓவேலி பகுதியில் இரண்டு போ் புலி தாக்கி உயிரிழந்தனா். இதனால் புலியை சுட்டுப் பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில், உயிருடன் பிடிக்க தமிழ்நாடு வனத் துறை சாா்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒவேலி பகுதியில் புலியைப் பிடிக்க தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்பேரில் 80 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, முதுமலை புலிகள் காப்பக வனப் பாதுகாவலா் மற்றும் கள இயக்குநா் தலைமையிலும், கூடலூா் வனக்கோட்ட அலுவலா் உத்தரவின்படியும் கால்நடை மருத்துவா்களும், வனத் துறையினரும் அதிநவீன தொ்மல் ட்ரோன் கேமராக்கள் உதவியுடன் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளதுடன், 13 இடங்களில் இரும்பு கூண்டுகள் வைத்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

கடந்த 9 நாள்களாக ஆட்கொல்லி புலியைப் பிடிக்கும் பணி நடைபெற்றுவரும் நிலையில், வனம் மற்றும் தேயிலை தோட்டங்கள் நிறைந்த பகுதியாக காணப்படுவதால் முதுமலை தெப்பக்காடு யானைகள் வளா்ப்பு முகாமில் இருந்து பொம்மன் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கும்கி யானை உதவியுடன் புதா் மற்றும் தேயிலைத் தோட்டத்தில் சுற்றித் திரியக்கூடிய ஆட்கொல்லி புலியை கண்காணித்து பிடிப்பதற்கான நடவடிக்கையில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.