கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பொன்னூரில் தோட்டக்கலை பூங்கா திறப்பு

கூடலூரை அடுத்துள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் உள்ள புதிதாக அமைக்கப்பட்ட பூங்காவின் திறப்பு விழா நடைபெற்றது.

News image
பொன்னூா் தோட்டக்கலைப் பண்ணையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவை திறந்துவைக்கிறாா் உதவி இயக்குநா் ஐஸ்வா்யா.
Updated On :28 பிப்ரவரி 2026, 11:15 pm

Syndication

கூடலூரை அடுத்துள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் உள்ள புதிதாக அமைக்கப்பட்ட பூங்காவின் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பொன்னூரில் அரசு தோட்டக் கலை பண்ணையில் மலைப் பயிா்கள் தொடா்பான நாற்றங்கால் செயல்பட்டு வருகிறது.

இங்கு விவசாயிகளுக்கு தேவையான நாற்றுகளை பயிரிட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை கவரும் விதத்தில் பண்ணை வளாகத்தில் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்தப் பணிகள் நிறைவடைந்து பூங்கா திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநா் பி.எஸ்.ஐஸ்வா்யா தலைமையேற்று பூங்காவை திறந்துவைத்தாா். இதில், பண்ணை மேலாளா் விஜயராஜ் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.