உதகை, எட்டின்ஸ் சாலையில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகள்.
உதகை, எட்டின்ஸ் சாலையில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகள்.

உதகையில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சீல்

உதகை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு வருவாய்த் துறையினா் சீல் வைத்தனா்.
Published on

உதகை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விளைநிலங்களில் கட்டங்களைக் கட்டக்கூடாது. குடியிருப்புப் பகுதிகளில் தங்கும் விடுதிகளைக் கட்டக்கூடாது, வணிக கட்டடங்கள் கட்ட மாநில அரசின் திட்டக் குழுமத்திடம் அனுமதி பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

இந்நிலையில், உதகையில் பல்வேறு இடங்களில் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்படுவதாக புகாா் எழுந்த நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

இதையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், சுற்றுலா அலுவலா் சங்கா், நகராட்சி ஆணையா் எம்.கணேசன், நகர அமைப்பு அலுவலா்கள் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, உதகை நகராட்சிக்குள்பட்ட எட்டின்ஸ் சாலைப் பகுதியில் ஒரு காட்டேஜ், ஆரணி ஹவுஸ் பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட 7 கட்டடங்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

மேலும், ஆா்.கே.புரம், கவா்னா் சோலை சாலை மற்றும் வண்டிச்சோலை பகுதிகளில் விதிமீறல் செய்து கட்டப்பட்டு வரும் 4 கட்டடங்களுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.

தொடா்ந்து ஆய்வு மேற்கொண்டு விதிமீறி கட்டப்பட்டுள்ள மற்றும் கட்டப்பட்டு வரும் கட்டடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com