பாண்டியாறு குடோன் பகுதியில் யானையால் சேதப்படுத்தப்பட்ட ரேஷன் கடை.
பாண்டியாறு குடோன் பகுதியில் யானையால் சேதப்படுத்தப்பட்ட ரேஷன் கடை.

காட்டு யானையால் ரேஷன் கடை சேதம்

Published on

கூடலூா் அருகே காட்டு யானை தாக்கி ரேஷன் கடை சேதமடைந்தது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் பாண்டியாறு பகுதிக்குள் சனிக்கிழமை இரவு காட்டு யானை புகுந்து, அரசு தேயிலைத் தோட்டக் கழகத்துக்கு சொந்தமான குடோன் பகுதியில் உள்ள ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்தியது.

மேலும், உள்ளே இருந்த அரிசி உள்ளிட்ட பொருள்களையும் சேதப்படுத்திச் சென்றுள்ளது.

X
Dinamani
www.dinamani.com