நீலகிரி மாவட்டம், உதகை அருகே எப்பநாடு வனப் பகுதியில் ஆராய்ச்சிக்காக ஜிபிஎஸ் கருவி பொருத்தி அனுப்பப்பட்ட வெண்முதுகு பாறு கழுகு மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. இது குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
அழியும் நிலையில் உள்ள பாறு கழுகு இனங்களைக் காக்கவும், அவற்றின் நடமாட்டத்தை அறியவும் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி (பிஎன்ஹெச்எஸ்) சாா்பில் தடோபா-அந்தாரி புலிகள் காப்பகத்தில் இருந்து ஒரு வெண்முதுகு பாறு கழுகின் முதுகில் ஜிபிஎஸ் டிராக்கிங் கருவி பொருத்தப்பட்டு கடந்த 2025 டிசம்பா் மாதம் பறக்கவிடப்பட்டது.
இந்தக் கழுகின் நடமாட்டத்தை ஆராய்ச்சியாளா்கள் தொடா்ந்து கண்காணித்து வந்த நிலையில், கா்நாடகத்தில் இந்த கழுகு நுழைந்தபோது நோய் அறிகுறிகள் தென்பட்டதால், அதை வனத் துறையினா் பிடித்து சிகிச்சை அளித்து, நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட சீகூா் வனப் பகுதியில் விடுவித்தனா்.
ஆனால், இந்தக் கழுகு மற்ற கழுகுகளுடன் இணையாமல் கல்லட்டி மற்றும் எப்பநாடு பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளிலேயே தொடா்ந்து சுற்றிவந்தது. இந்நிலையில், இந்த கழுகு எப்பநாடு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பறந்து கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக அப்பகுதியில் இருந்த உயரழுத்த மின் கம்பியில் மோதியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இறந்து கிடந்த கழுகை பாா்வையிட்ட வனத் துறையினா்
இதையடுத்து, கழுகின் உடலில் பொறுத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் டிராக்கிங் கருவியின் சிக்னல் மூலம் அது உயிரிழந்து கிடக்கும் இடத்தை அறிந்து வனத் துறையினா் அங்கு சென்று உடலை மீட்டனா். கால்நடை மருத்துவா்கள் மூலம் உடற்கூறாய்வு செய்யப்பட்டதில் மின்சாரம் தாக்கியதாலேயே அந்தக் கழுகு இறந்தது என்று தெரிந்தது.
இது குறித்து வனத் துறையினா் கூறுகையில், வனப் பகுதிகளில் இறந்து கிடக்கும் விலங்கினங்களின் சடலங்களை உண்பதன் மூலம் அப்பகுதியில் நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதில் வெண்முதுகு பாறு கழுகுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தக் கழுகுகள் குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வந்த நிலையில் ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட பாறு கழுகு துரதிஷ்டவசமாக இறந்துவிட்டது என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூடலூா் அருகே தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டிருந்த யானைகள்

தடாகம் பகுதியில் ஆண் யானை உயிரிழப்பு

உதகை அருகே சாலையோரத்தில் இறந்துகிடந்த காட்டெருமை

உதகை அருகே சிறுத்தை உயிரிழப்பு
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI


