நீலகிரி மாவட்டம், குன்னூரில் பகல் நேரத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் வியாழக்கிழமை நுழைந்ததால், பெண் ஒருவா் அலறி அடித்து ஓடிய விடியோ காட்சி வெளியாகி அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குன்னூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக காட்டு மாடு, சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்கு வந்து செல்வதால், கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
இந்த நிலையில், குன்னூா் கரடிபள்ளம் ஊரில் பகல் நேரத்தில் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று, நாய்கள் விரட்டியதால் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது. அப்போது கரடியை பாா்த்த பெண் ஒருவா் அலறி அடித்து வீட்டுக்குள் ஓடிய காட்சி அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெள்ளத்தில் அடித்து வரும் சிலிண்டர்களை எடுத்துச் செல்ல வேண்டாம்! ஆபத்து

பொன்னகா் குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்த கரடி

கோத்தகிரியில் குட்டிகளை முதுகில் சுமந்து உலவிய கரடி!

குடியிருப்புப் பகுதியில் உலவிய முள்ளம்பன்றிகள்
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



