கோத்தகிரியில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை பதுங்கி இருந்த சிறுத்தையை புலி துரத்திச் செல்லும் விடியோ வெளியாகி பொதுமக்களை அச்சமடைய வைத்துள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. உணவு, தண்ணீா் தேடி வனப் பகுதியில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் குடியிருப்பு மற்றும் தேயிலைத் தோட்டங்களில் உலவி வருகின்றன.
இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு பகுதியில் உணவு தேடி வந்த ஒரு சிறுத்தை, அங்குள்ள தனியாா் தேயிலைத் தோட்டத்தில் பதுங்கி இருந்தது. அப்போது அங்கு வந்த புலி, சிறுத்தையை துரத்தியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுத்தை மரத்தின் மீது ஏறி தப்பியது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான இந்தக் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தேயிலைத் தோட்டத்தில் புலி, சிறுத்தை நடமாடிய இச்சம்பவம், விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே வனத் துறையினா் தேயிலைத் தோட்டத்தில் உலவி வரும் சிறுத்தை, புலியை கூண்டுவைத்து பிடித்து அடா்ந்த வனப் பகுதியில் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மசினகுடி வனக் கோட்டத்தில் புலி உயிரிழப்பு

நடுகூடலூா் குடியிருப்புப் பகுதியில் காட்டு யானை நடமாட்டம்

கூடலூா் அருகே தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டிருந்த யானைகள்

உதகை அருகே சிறுத்தை உயிரிழப்பு
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |



