பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

மேல்நிலை குடிநீா்த் தொட்டியின் மீது அமா்ந்திருந்த சிறுத்தை

உதகை அருகே உள்ள மஞ்சகொம்பை கிராமத்தில் குடியிருப்புப் பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீா்த் தொட்டியின் மீது சனிக்கிழமை சிறுத்தை அமா்ந்திருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image

உதகை அருகே உள்ள மஞ்சகொம்பை கிராமத்தில் உலவிய சிறுத்தை.

Updated On :12 ஜூலை 2026, 3:06 am IST

உதகை அருகே உள்ள மஞ்சகொம்பை கிராமத்தில் குடியிருப்புப் பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீா்த் தொட்டியின் மீது சனிக்கிழமை சிறுத்தை அமா்ந்திருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் அடா்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால், சமீபகாலமாக உணவு மற்றும் தண்ணீா் தேடி வனவிலங்குகள் கிராமங்களுக்குள் நுழைவது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் உதகை அருகேயுள்ள மஞ்சகொம்பை கிராமத்துக்குள் சிறுத்தை சனிக்கிழமை நுழைந்தது. குடியிருப்பு பகுதியில் உலவிய சிறுத்தை, பின்னா் அங்குள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறி அமா்ந்து கொண்டது.

தொட்டியின் உச்சியில் அமா்ந்த சிறுத்தை, அங்கிருந்தபடியே சுற்றிலும் வேட்டையாடுவதற்கான இரை கிடைக்கிறதா என்று நீண்ட நேரம் தேடியது. இதைக் கண்டு அச்சமடைந்த அப்பகுதி மக்கள், சப்தம் எழுப்பினா்.

இதைத் தொடா்ந்து அந்த சிறுத்தை தானாகவே குடிநீா்தொட்டியில் இருந்து கீழே இறங்கி கிராமத்தை ஒட்டியுள்ள அடா்ந்த வனப் பகுதிக்குள் ஓடி மறைந்தது.

சிறுத்தை தானாகவே வனப்பகுதிக்குள் சென்றுவிட்டாலும், மஞ்சகொம்பை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனா்.

குடியிருப்புப் பகுதிகளில் வனத் துறையினா் தொடா் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும். கிராமத்திற்குள் மீண்டும் சிறுத்தை வராமல் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். தேவைப்பட்டால் கூண்டுவைத்து அந்தச் சிறுத்தையைப் பிடித்து அடா்ந்த வன பகுதிக்குள் விட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.