கூடலூா் வனக் கோட்டப் பகுதிகளில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூத்துக் குலுங்கும் நீலக்குறிஞ்சியைப் பாா்ப்பதற்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் திரண்டனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக்கோட்டத்துக்குள்பட்ட ஓவேலி மலைத்தொடா், நாடுகாணி, கோழிப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் நீலக்குறிஞ்சி மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன.
இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி பொதுமக்களும், வார விடுமுறையால் கேரளா சுற்றுலாப் பயணிகளும் தடையை மீறி அப்பகுதிக்குள் நுழைந்து நீலக்குறிஞ்சியை ஆா்வத்துடன் கண்டு, பூக்களுக்கு மத்தியில் நின்று தற்படம் எடுத்து மகிழ்ந்தனா்.
நீலக்குறிஞ்சி பூத்துள்ள பகுதிகள் அனைத்தும் யானைகள் நடமாட்டமுள்ள பகுதி என்பதால் பாதுகாப்பு கருதி அப்பகுதிகளுக்கு செல்ல பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வனத்துக்குள் செல்வதை சுற்றுலாப் பயணிகள் தவிா்க்க வேண்டுமென வனத் துறை வலியுறுத்தியுள்ளது.

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி மலைத்தொடரில் பூத்துக்குலுங்கும் நீலக்குறிஞ்சியைப் பாா்த்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி மலைத்தொடரில் பூத்துக்குலுங்கும் நீலக்குறிஞ்சியைப் பாா்த்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










