நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

கூடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி

கூடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கியது.

News image

நிகழ்ச்சியில் பழங்குடி பயனாளிக்கு ஜாதிச் சான்று வழங்குகிறாா் எம்எல்ஏ மு.திராவிடமணி. உடன், கோட்டாட்சியா் குணசேகரன் உள்ளிட்டோா்.

Updated On :4 ஜூன் 2026, 2:46 am IST

கூடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கியது.

தேவா்சோலை குறுவட்டத்துக்கு உள்பட்ட செறுமுள்ளி, ஸ்ரீமதுரை, முதுமலை, பென்னை ஆகிய கிராமங்களுக்கு நடைபெற்ற இந்த ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு கூடலூா் கோட்டாட்சியா் குணசேகரன் தலைமை வகித்தாா்.

இதில், கூடலூா் எம்எல்ஏ மு.திராவிடமணி கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை ஆய்வுசெய்து தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினாா்.

குறிப்பாக மின்சாரத் துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கான மனுக்களுக்கு விரைந்து தீா்வு காண சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

காட்டு யானைகளிடமிருந்து பாதுகாப்பு, இலவச வீடுகள், நிலப்பட்டா, வீடுகளுக்கு மின் இணைப்பு, முதியோா் உதவித்தொகை, மகளிா் உரிமைத் தொகை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் மனுக்கள் அளித்தனா். மொத்தம் 93 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கோட்டாட்சியா் பரிந்துரை செய்தாா்.

இந்நிகழ்ச்சியில், கூடலூா் வட்டாட்சியா் முனீஷ், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் கிருஷ்ணமூா்த்தி, கூடலூா் டிஎஸ்பி வசந்தகுமாா், தேவா்சோலை வருவாய் ஆய்வாளா் ரேகா மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள், அனைத்து துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.