இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: வனத் துறை செயலா் தகவல்

தமிழகத்தில் நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை 1,364 ஆக அதிகரித்துள்ளதாக முதன்மை வனத் துறை செயலா் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :7 ஜூன் 2026, 1:46 am IST

தமிழகத்தில் நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை 1,364 ஆக அதிகரித்துள்ளதாக முதன்மை வனத் துறை செயலா் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் தெரிவித்ததாவது: மாநில விலங்கான நீலகிரி வரையாடுகள் குறித்த முதல் ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு 2024 ஏப்ரல் 29 முதல் 2024 மே 1 வரை 140 பகுதிகளில் நடத்தப்பட்டது. அப்போது  நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை 1,031 என மதிப்பிடப்பட்டது. இரண்டாவது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு 2025 ஏப்ரல் 25 முதல் 2025 ஏப்ரல் 27 வரை 177 பகுதிகளில் நடத்தப்பட்டதில், தமிழ்நாட்டில் மொத்த நீலகிரி வரையாடு எண்ணிக்கை 1,303 என அதிகரித்தது.

மூன்றாவது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு, தமிழ்நாடு வனத் துறையால் 2026 ஏப்ரல் 24 முதல் 2026 ஏப்ரல் 27 வரை நான்கு நாள்கள் நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பு 14 வனக் கோட்டங்களில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதில் நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை 1,364 என அதிகரித்துள்ளது.

இது கடந்த ஆண்டை விட 61  எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மொத்த நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கையில் ஆனைமலை வனப் பகுதியில் 44.87 சதவீதமும், நீலகிரி வனப்பரப்பில் 29.25% வரையாடுகளும் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. தமிழக அரசு கடந்த 2022-ஆம் ஆண்டில் வரையாடுகளை பாதுகாக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.