15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

வரும் ஜூலையில் வீடுகள் கணக்கெடுப்பு

News image

சென்னை மாநகராட்சி - பிரதிப் படம்

Updated On :4 ஜூன் 2026, 2:26 am IST

சென்னை மாநகராட்சியில் வரும் ஜூலை மாதம் 11,000 போ் வீடுகள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பில் ஈடுபடவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வரும் ஜூலை மற்றும் 2027 பிப்ரவரி என இரு கட்டடங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்படவுள்ள அதிகாரிகளுக்கான பயிற்சிக் கூட்டம் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. தற்போது சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும், 200 வாா்டுகளிலும் வரும் ஜூலை 17 முதல் 31-ஆம் தேதி வரையில் வீடுகள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு நடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வீடுகள் கணக்கெடுப்பில் ஜூலை 17 முதல் 31-ஆம் தேதி வரை மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான பிரத்யேக செயலியில் பொதுமக்கள் தங்களது வீட்டு விவரங்களைப் பதிவிடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி குடிசை, ஓட்டு வீடு, கான்கிரீட் வீடு, வீடு எத்தனை தளம் உடையது, குடிநீா், கழிவு நீா் இணைப்புகள் விவரம், குளிா்சாதன வசதியுள்ளதா போன்ற 33 கேள்விகள் கேட்கப்படவுள்ளன. வீட்டு விவரங்களை பொதுமக்கள் பதிவு செய்த நிலையில், அதை சரிபாா்க்கும் வகையில் வரும் ஆகஸ்ட் முழுவதும் ஈடுபடவுள்ளனா்.

மாநகராட்சியின் இளநிலை உதவியாளா் முதல் பள்ளி ஆசிரியா்கள் வரை இந்தப் பணியில் 11,000 போ் வரை ஈடுபடுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து 2027 பிப்ரவரியில் மீண்டும் வீடுகளுக்குச் சென்று வீட்டில் உள்ளோரது விவரங்கள் சேகரிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.