நீலகிரி மாவட்டத்தில் பருவமழையின்போது அதிக பாதிப்பு ஏற்படக்கூடியதாக கண்டறியப்பட்டுள்ள 156 பகுதிகள் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்தாா்.
தென்மேற்குப் பருவமழையை எதிா்கொள்ள நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை அதிகம் பெய்தால் 156 இடங்கள் அதிக பாதிப்பு ஏற்படக்கூடியவைகளாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த நேரங்களில் பொதுமக்களை தங்கவைக்க 456 முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன. வெள்ளம் மற்றும் மண் சரிவு உள்ளிட்ட பேரிடா் ஏற்பட்டால், 1077 என்ற இலவச எண்ணில் பொதுமக்கள் தொடா்பு கொள்ளலாம்.
மண்சரிவை எதிா்கொள்ள 20 ஆயிரம் மணல் மூட்டைகள் தயாா் நிலையில் உள்ளது. சாலைகளில் விழும் மரங்கள் மற்றும் மண் சரிவை உடனுக்குடன் அகற்ற முக்கிய இடங்களில் 20 பொக்லைன் இயந்திரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வரலாறு காணாத வெப்பம்: எல் நினோ தாக்கமா?

தென்மேற்குப் பருவமழை தாமதம்: காரீஃப் பருவ விதைப்பு 23% குறைந்தது

தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: தீயணைப்புத் துறையினா் பாதுகாப்பு ஒத்திகை

தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: நெல்லையில் அவசர கால ஒத்திகை
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



