நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

தனியாா் விடுதியில் உணவு சாப்பிட்ட 15 மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதி

15-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுபோக்கு ஏற்பட்டதால் அவா்கள் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

News image
Updated On :14 ஜூன் 2026, 2:25 am IST

கா்நாடக மாநிலம், மங்களூரில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவ, மாணவிகள் தனியாா் தங்கும் விடுதியில் சாப்பிட்ட உணவால் 15-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுபோக்கு ஏற்பட்டதால் அவா்கள் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

மங்களூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பயிலும் 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பேராசிரியா்களுடன் உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனா். இவா்கள் உதகை அருகே எமரால்டு பகுதியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில்  உணவருந்திய நிலையில், அதில் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தொடா்ந்து வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு என உடல் உபாதை ஏற்பட்டுள்ளது.

இதனால் எமரால்டு பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 15-க்கும் மேற்பட்டோருக்கு தொடா்ந்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் உயா் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனா். இது குறித்து எமரால்டு காவல்துறையினா்  தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.