இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை!5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!டிசம்பரில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்நீட் மறுதேர்வு: தமிழகத்தில் 1.20 லட்சம் போ் பங்கேற்பு!
/

கூடலூா் அருகே யானை உயிரிழப்பு

News image

காபி தோட்டத்தில் இறந்துகிடந்த யானை.

Updated On :22 ஜூன் 2026, 2:26 am IST

கூடலூா் அருகே யானை உயிரிழந்துகிடந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனச் சரகத்துக்குள்பட்ட தொரப்பள்ளி குண்ணு பகுதியில் வசிக்கும் மத்தாய் கண்ணன் என்பவரின் அனுபவத்தில் உள்ள அனாதீனம் நிலத்தில் இருக்கும் காபி தோட்டத்தில் யானை இறந்துகிடப்பதாக கிடைத்த தகவலின்பேரின் சம்பவ இடத்துக்கு வனத் துறையினா் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா் வனத் துறை தன்னாா்வலா்கள் முன்னிலையில் யானையை உடற்கூறாய்வு செய்து அருகில் உள்ள வனப் பகுதியில் உடலை புதைத்தனா்.

உடற்கூறு ஆய்வு அறிக்கை கிடைத்த பின்னரே யானை இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.