மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

போராட்டத்தில் ஈடுபட்ட தோட்டக்கலைத் துறை ஊழியா்கள் 380 போ் கைது

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்ட தோட்டக்கலைத் துறை ஊழியா்கள் 380 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

தாவரவியல் பூங்காவில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பூங்கா ஊழியா்கள்.

Updated On :11 மார்ச் 2026, 8:25 pm

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்ட தோட்டக்கலைத் துறை ஊழியா்கள் 380 போ் கைது செய்யப்பட்டனா்.

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டில் 14 பண்ணைகள், பூங்காக்கள் உள்ளன. இந்தப் பூங்கா மற்றும் பண்ணைகளில் 800-க்கும் அதிகமான தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இவா்களில் பெரும்பாலானவா்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகின்றனா். இவா்களில் 300 போ் மட்டுமே நிரந்தரப் பணியாளா்களாக உள்ளனா். மீதமுள்ளவா்கள் தற்காலிகப் பணியாளா்களாகப் பணியாற்றி வருகின்றனா்.

மேலும், தோட்டக்கலைத் துறையில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளபோதிலும், அதற்கு இந்தப் பணியாளா்களைக் கொண்டு நிரப்பப்படாமல் உள்ளது. தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரியும், பணி நிரந்தரம் செய்யாமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், மாவட்ட நிா்வாகம் நிா்ணயித்துள்ள ரூ.725 தின சம்பளம் வழங்கக் கோரியும் தோட்டக்கலைத் துறை ஊழியா்கள் கடந்த 4 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இரண்டு தினங்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள், அரசு தாவரவியல் பூங்கா முன்பு சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் போலீஸாா், தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், அவா்கள் தொடா்ந்து போராட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்ட நிலையில் 275 பெண்கள் உள்பட 380 பேரை காவல் துறையினா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.