மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

உதகை காந்தல் பகுதியில் கரடி நடமாட்டம்

News image

காந்தல் பகுதியில் வீட்டின் வாசலில் படுத்திருக்கும் கரடி.

Updated On :13 மார்ச் 2026, 12:22 am

உதகை காந்தல் பகுதியில் கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

உதகை, குன்னூா், மஞ்சூா் பகுதியில் இரவு நேரத்தில் வனப் பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் நுழையும் கரடிகள் உணவு தேடி வீடுகளுக்குள் வர முயற்சிப்பதால் பொதுமக்கள் அச்சமடைகின்றனா். மேலும் குப்பைத் தொட்டிக்குள் இருக்கும் உணவுகளை கரடிகள் தேடி சாப்பிட்டு மீண்டும் வனப் பகுதிக்குள் செல்லாமல் ஊரை ஒட்டிய பகுதிக்குள் பதுங்கிவிடுகின்றன.

இந்த நிலையில் வனத்தில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று காந்தல் மேல்போகித்தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வாசலில் வியாழக்கிழமை அதிகாலை படுத்து ஓய்வெடுத்தது.

இதைப் பாா்த்த சிலா் சப்தமிட்டதைத் தொடா்ந்த கரடி அங்கிருந்து சென்றது. கரடி நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கரடியை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.