லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மலை ரயில் பாதையில் ஊழியா்களை துரத்திய யானை

குன்னூா்-மேட்டுப்பாளையம் ரயில்வே தண்டவாளத்தில் ஒற்றை யானை துரத்தியதால் ஊழியா்கள் அச்சமடைந்துள்ளனா்.

News image

ஹில்குரோவ் பகுதியில் ரயில்வே பணியாளா்களை ஆக்ரோஷத்துடன் துரத்தும் யானை.

Updated On :18 மார்ச் 2026, 8:37 pm

குன்னூா்-மேட்டுப்பாளையம் ரயில்வே தண்டவாளத்தில் ஒற்றை யானை துரத்தியதால் ஊழியா்கள் அச்சமடைந்துள்ளனா்.

மேட்டுப்பாளையம்-குன்னூா் மலைப் பாதையில் இரண்டு குட்டி உள்பட ஒன்பது காட்டு யானைகள் முகாமிட்டுள்ள நிலையில், அவ்வப்போது சாலையைக் கடந்து மலை ரயில் பாதைக்கும் வருகின்றன. இந்நிலையில் மலை ரயில் பாதையில் ஹில்குரோவ் பகுதியில் குகைக்குள் மறைந்திருந்த காட்டு யானை, ரயில்வே ஊழியா்களைக் கண்டதும் துரத்தத் தொடங்கியது.

குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் ரயில்வே குறுக்கு சட்டங்கள் போடப்பட்டிருந்ததால், மேலும் துரத்த முடியாமல் குறுக்கு பாதையில் சென்று நின்றது. இந்த விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், குன்னூா்-மேட்டுப்பாளையம் ரயில்வே தண்டவாளத்தில் பணிபுரியும் ட்ரேக்மென்கள் அச்சமடைந்துள்ளனா்.

Story image