விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கூடலூா் அருகே பழங்குடியின கிராமத்தில் குழந்தை உள்பட 4 பேரை கடித்த வெறிநாய்

கூடலூா் அருகே பழங்குடியின கிராமத்தில் சுற்றித்திரிந்த வெறிநாய், அப்பகுதியிலுள்ள குழந்தை உள்பட நான்கு பேரை கடித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

கூடலூா் அருகே பழங்குடியின கிராமத்தில் சுற்றித்திரிந்த வெறிநாய், அப்பகுதியிலுள்ள குழந்தை உள்பட நான்கு பேரை கடித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் புளியம்பாறை பழங்குடியின கிராமத்தில் உள்ள வளா்ப்பு நாய்க்கு ரேபிஸ் பாதிப்பு இருந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியிலுள்ள நான்கு பேரை அந்த நாய் கடித்துள்ளது. மேலும் சில நாய்களையும் கடித்துள்ளது.

பொதுமக்களை துரத்தி கடிப்பதைப் பாா்த்து, அந்த நாயை அங்குள்ளவா்கள் தாக்கி கொன்றனா்.

தகவல் அறிந்து வனத் துறையினா் மற்றும் கால்நடைத் துறையினா் சென்று ஆய்வு நடத்தினா். இறந்த நாயை பரிசோதித்ததில் ரேபிஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நாய் கடித்த அனைவருக்கும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.