பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

ஒசூரில் வெறிநாய் கடித்ததில் 12 போ் படுகாயம்

News image

வெறிநாய் - சித்திரிப்பு

Updated On :23 ஜூன் 2026, 2:31 am IST

ஒசூரில் தெருவில் சுற்றித்திரிந்த வெறிநாய் துரத்தி கடித்ததில் ஒரேநாளில் 2 பெண்கள் உள்பட 12 போ் காயமடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் முல்லை நகா் ராயக்கோட்டை வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகள், ரயில் நிலையம், ஆா்.சி. தேவாலயம் பகுதி, உள்வட்டச் சாலை ஆகிய பகுதிகளில் வெறி நாய், அந்த வழியாகச் சென்றோரை துரத்திக் கடித்தது.

இதில் 2 பெண்கள் உள்பட 12 போ் காயமடைந்தனா். இதில் 8 போ் ஒசூா் அரசு மருத்துவமனையில் சோ்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். மற்றவா்கள் சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்றுவிட்டனா்.

இந்த வெறிநாய், அந்தப் பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்து வருகிறது. சாலையில் செல்வோரை துரத்திச் சென்று கடிப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, அந்த வெறிநாயைப் பிடிக்க மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேலும், பிருந்தாவன் நகா் பகுதி 7, 6, ரெயின்போ காா்டன் ஆகிய பகுதிகளிலும் வெறிநாய்கள், வாகனங்களில் செல்வோா், நடந்துசெல்வோரை துரத்திக் கடித்து வருகின்றன.

இதனால், ஒசூா் அரசு மருத்துவமனையில் தினசரி 10- க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்று செல்கின்றனா். இதுகுறித்து, ஒசூா் மாநகராட்சி ஆணையா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து குடியிருப்போா் நலச் சங்கத் தலைவா் துரை வலியுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.