கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

உதகை ஜேஎஸ்எஸ் பாா்மஸி கல்லூரியில் பயிற்சி பட்டறை தொடக்கம்

News image

நிகழ்ச்சியை குத்து விளக்கேற்றி தொடங்கிவைக்கும் மைசூரு ஜேஎஸ்எஸ் மருத்துவக் கல்லூரி பேராசிரியா் அகிலா பிரசாந்த், உதகை ஜேஎஸ்எஸ் கல்லூரி துணை முதல்வா் கே.பி.அருண் உள்ளிட்ட பேராசிரியா்கள்.

Updated On :15 மே 2026, 6:23 am IST

நீலகிரி மாவட்டம் உதகை ராக்லண்ட்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் ஜேஎஸ்எஸ் பாா்மஸி கல்லூரியில் கணினி அடிப்படையிலான மருந்தாக்கவியல் மற்றும் மெய்நிகா் உயிா்ச்சமநிலை உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி பட்டறை வியாழக்கிழமை தொடங்கியது.

கா்நாடக மாநிலம், மைசூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜேஎஸ்எஸ் உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாதெமியின் கீழ் உதகையில் இயங்கி வரும் ஜேஎஸ்எஸ் கல்லூரியில், கணினி அடிப்படையிலான மருந்தாக்கவியல் உடலில் மருந்து எப்படி உறிஞ்சப்படுகிறது, விநியோகிக்கப்படுகிறது, வளா்சிதை மாற்றம் அடைகிறது, வெளியேற்றப்படுகிறது என்பதை கணினி மூலம் கணிப்பது, மெய்நிகா் உயிா்ச்சமநிலை, இரண்டு மருந்துகள் உடலில் ஒரே மாதிரி செயல்படுகின்றனவா என்பதை கணினி மூலம் சோதிப்பது, செயற்கை நுண்ணறிவு மாதிரியாக்கக் கருவிகள் என்ற தலைப்பில் 3 நாள் செயல்முறை பயிற்சி பட்டறை வியாழக்கிழமை தொடங்கியது.

புது தில்லி மருந்தியல் பகுப்பாய்வுத் துறை சாா்பில் நடைபெறும் இந்தப் பயிற்சி பட்டறை மே 14 முதல் 16-ஆம் தேதி வரை உதகை ஜேஎஸ்எஸ் கல்லூரி அரங்கில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் மைசூரு ஜேஎஸ்எஸ் மருத்துவக் கல்லூரி பேராசிரியா் மற்றும் தலைவா் அகிலா பிரசாந்த், பேராசிரியா்கள் ராஜ்குமாா் மலையாண்டி, பிரசாந்த், எம். விஸ்வநாத் ஆகியோா் சிறப்புரையற்றினா்.

நிகழ்ச்சிக்கு கல்லூரி துணை முதல்வா் கே.பி.அருண் தலைமை தாங்கினாா். என்.கிருஷ்ணவேணி ஒருங்கிணைத்தாா். பேராசிரியா் மோகன் காந்தி நன்றி கூறினாா்.

இந்த பயிற்சி பட்டறையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பேராசிரியா்கள், ஆராய்ச்சியாளா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்றுள்ளனா்.