பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

உதகையில் ரோஜா கண்காட்சி கோலாகலமாக தொடக்கம்

News image

ரோஜா கண்காட்சியைத் தொடங்கி வைக்கும் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு. ~ரோஜா மலா்களால் உருவாக்கப்பட்ட அன்னப் பறவை. ~கழுகு

Updated On :1 மணி நேரம் முன்பு

கோடை விழாவையொட்டி, நீலகிரி மாவட்டம், உதகை விஜயநகரம் பகுதியில் உள்ள அரசு ரோஜா பூங்காவில் 21-ஆவது ரோஜா கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனை ஒட்டி நாள்தோறும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியான 21-ஆவது ரோஜா கண்காட்சியின் தொடக்க விழா உதகை ரோஜா பூங்காவில் நடைபெற்றது.

சுமாா் 2 லட்சம் ரோஜா மலா்களைக் கொண்டு ‘பறவைகளின் சொா்க்கம்’ என்ற கருப்பொருளை உள்ளடக்கி பல்வேறு பறவையினங்களின் பிரம்மாண்ட வடிவங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. 60,000 ரோஜா மலா்களைக்  கொண்டு அன்னப் பறவைகள், கழுகு, இருவாச்சி பறவை, புல் புல், ஆங்ரி போ்ட், தூக்கனாங்குருவி, சிட்டுக் குருவி உள்ளிட்ட 14 வடிவங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. 

குறிப்பாக 14 அடி  நீளம், 12 அடி உயரம் கொண்ட ரோஜாக்களால் ஆன அன்னப் பறவை அனைவரையும் வெகுவாக கவா்ந்தது. பூங்கா முழுவதும் 4,000-க்கும் மேற்பட்ட ரகங்களைச் சோ்ந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஜா செடிகளில் பல வண்ண மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன.

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாரம்பரிய ரோஜா செடிகளுக்கு தனி பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த மலா்களும் பாா்வையாளா்களைக் கவா்ந்து வருகின்றன.

மேலும் பல்வேறு வண்ண மலா்கள் மூலம் அமைக்கப்பட்ட செல்ஃபி பாய்ண்ட்டில் சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் நின்று படம் எடுத்துக் கொண்டனா்.

இந்தக் கண்காட்சி தொடக்க விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் நவநீதா, உதவி இயக்குநா்கள் பைசல், பபிதா, மேனகா, உதகை நகா்மன்றத் தலைவி வாணீஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இந்த ரோஜா கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கி வரும் மே 18-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு நடைபெறும் என தோட்டக்கலைத் துறையினா் தெரிவித்தனா்.

Story image
Story image