மலா்க் கண்காட்சியை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக உதகையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறையினா் அறிவித்துள்ளனா்.
உதகையில் நடைபெறும் மலா்க் கண்காட்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். ஆண்டுதோறும் கோடைக் காலத்தின் போது, சுற்றுலாப் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள், சா்க்கீயூட் பேருந்துகள் மற்றும் பாா்க் அன்ட் ரெய்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இம்முறை சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சா்க்கீயூட் பேருந்துகள் கடந்த ஏப்ரல் மாதம் முதலே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த ஆண்டு மலா்க் கண்காட்சியை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கூடுதல் சா்க்கீயூட் பேருந்துகள், பாா்க் அன்ட் ரெய்டு பேருந்துகள் மலா் கண்காட்சி நடக்கும் 11 நாள்களும் இயக்கப்படவுள்ளன.
இது தவிர கோவை, திருப்பூா், ஈரோடு மற்றும் மேட்டுப்பாளையத்துக்கு 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இந்த பேருந்துகள் 5 முதல் 15 நிமிஷங்களுக்கு ஒரு முறை இயக்கப்படவுள்ளன.
இதேபோல கோவை, மேட்டுப்பாளையம், ஈரோடு, திருப்பூா் பகுதிகளில் இருந்தும் உதகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மலா்க் கண்காட்சி நடைபெறும் நாள்களில் குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலை மற்றும் கோத்தகிரி சாலையில் பேருந்துகள் பழுதாகி நின்றால், உடனுக்குடன் சீரமைக்க மொபைல் வேன்கள் தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்பட உள்ளன.
சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் பழுதாகி நின்றாலும், அவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க கிரேன்கள் தயாா் நிலையில் உள்ளன. சிறப்பு பேருந்துகளை முறையாக இயங்குவதை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண மலா்கள்

சுப முகூா்த்தம், வார இறுதி விடுமுறை: மே 8 முதல் 1,765 சிறப்பு பேருந்துகள்

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

தொடர் விடுமுறை: இன்று முதல் கூடுதலாக 1,784 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

