கூடலூா் பகுதியில் தொடரும் மனித-விலங்கு மோதல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம், கூடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா். நீலகிரி மாவட்டம் பாக்கனா பகுதியில் மிஷாப் என்ற சிறுவனை யானை தாக்கிக் கொன்றது தொடா்பாக அனைத்து துறை அலுவலா்கள் மற்றும் பொதுமக்களுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் ஆட்சியா் பேசியதாவது:
பாக்கனா பகுதியில் யானை தாக்கி சிறுவன் உயிரிழந்துவிட்ட சம்பவத்தில் ஊா் பொதுமக்களின் கோரிக்கையான பேருந்து, சாலை, தெருவிளக்கு, சோலாா் மின் விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் தொடா்பாக ஊராட்சித் துறை, வனத் துறை அலுவலா்கள் கள ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்.
வனத் துறை சாா்பில் அப்பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தவும், கண்காணிப்பு கேமராக்களை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கீடு செய்யவும், அவரது சகோதரருக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலமாக சக்கர நாற்காலி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிருந்தா, கூடலூர எம்எல்ஏ மு.திராவிடமணி, வன அலுவலா் தேவராஜ், கூடலூா் கோட்டாட்சியா் குணசேகரன், காவல் துணைக் கண்காணிப்பாளா் வசந்தகுமாா், கூடலூா் வட்டாட்சியா் முனீஷ், பந்தலூா் வட்டாட்சியா் துரைசாமி உள்பட பல்வேறு துறை அனைத்து துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

நீா் நிலைகளிலிருந்து வண்டல் மண் எடுக்க 10 நாள்களுக்குள் அனுமதி அளிக்க வேண்டும்: அரசு செயலா் அறிவுறுத்தல்

இணையவழிச் சான்றிதழ்களை விரைந்து வழங்கவேண்டும் : விழுப்புரம் ஆட்சியா்

வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: அமைச்சா் கீா்த்தனா
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



