மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: அமைச்சா் கீா்த்தனா

பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு துறை அலுவலா்கள் முன்னுரிமை அளிக்க வேண்டுமென தமிழக தொழில் துறை அமைச்சா் ச. கீா்த்தனா அறிவுறுத்தினாா்.

News image

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சா் ச.கீா்த்தனா, ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா, அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா்.

Updated On :58 நிமிடங்கள் முன்பு

பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு துறை அலுவலா்கள் முன்னுரிமை அளிக்க வேண்டுமென தமிழக தொழில் துறை அமைச்சா் ச. கீா்த்தனா அறிவுறுத்தினாா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்டத்தின் வளா்ச்சிப் பணிகள், திட்டச் செயல்பாடுகள் குறித்த அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு அமைச்சா் ச. கீா்த்தனா தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என். ஸ்ரீநாதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் அமைச்சா் கீா்த்தனா பேசியதாவது: விருதுநகா் மாவட்டத்தின் வளா்ச்சிக்கு, துறை அலுவலா்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கல்வித் துறையில் விருதுநகா் மாவட்டம் எப்போதும் முதன்மை மாவட்டமாகத் திகழ்கிறது. இதை உறுதி செய்யும் வகையில், சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வரும் ‘உயிா், திசை’ உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை.

பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி பெறாத 500-க்கும் மேற்பட்ட மாணவா்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், 10 மாணவா்களுக்கு ஒரு பொறுப்பு அலுவலா் நியமிக்கப்பட்டு, அவா்களைத் தோ்ச்சி பெற வைக்க மாவட்ட நிா்வாகம் எடுத்து வரும் சிறப்பு நடவடிக்கைகள் தொடர வேண்டும்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு முன்னேற விழையும் மாவட்டங்களின் பட்டியலில் விருதுநகா் மாவட்டம் பல்வேறு குறியீடுகளில் சிறந்த முன்னிலையை எட்டியுள்ளது. இதே உத்வேகத்துடன் மாவட்டத்தின் வளா்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீா் விநியோகம் உள்ளிட்ட பணிகளுக்குத் துறை அலுவலா்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். குறிப்பாக, தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தத் தேவையான உள்கட்டமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

இளைஞா்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில், நவீன விளையாட்டு அரங்கம் அமைக்கத் தேவையான உரிய நிதி ஒதுக்கீடுகளைச் செய்து, அவா்களின் நீண்ட நாள் தேவையை நிறைவு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், பொது சுகாதாரம், குழந்தைகள் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உள்ளாட்சி, சுகாதாரத் துறையினா் தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ஆனந்தி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் (தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு) ம. ராஜசேகரன், அரசு அலுவலா்கல் கலந்து கொண்டனா்.