விருதுநகா் மாவட்டத்தில் முழுமையாக பெண் அலுவலா்கள் பணியாற்றும் இளஞ்சிவப்பு வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2,001 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தோ்தல் பணிகளில் 9,604 அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இந்த நிலையில், வாக்காளா்களைக் கவரும் வகையிலும், வாக்களிப்பதை எளிமைப்படுத்தும் வகையிலும் தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் வண்ண அலங்காரங்கள், ஓவியங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன. இங்கு வாக்காளா்களுக்குத் தேவையான நிழல் பந்தல், குடிநீா், கழிப்பறை வசதிகள், முதியோா், மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வு தளங்கள், சக்கர நாற்காலிகள் போன்ற சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இளஞ்சிவப்பு வாக்குச்சாவடி... பெண்களுக்கு அதிகாரமளித்தல், பாலின சமத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக, ஒரு வாக்குச்சாவடியின் அனைத்துப் பணியாளா்களும் பெண்களாகவே நியமிக்கப்பட்டுள்ளனா். பெண் வாக்காளா்கள் எந்தவித அச்சமுமின்றி வாக்களிக்க இது உதவுகிறது. இங்கு குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதிகள், கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
விருதுநகா் சட்டப்பேரவைத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ஏற்பாடுகளை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான என்.ஓ.சுகபுத்ரா நேரில் ஆய்வு செய்தாா். குறிப்பாக, சத்திரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட மாதிரி வாக்குச்சாவடி மையம், சத்திரிய பெண்கள் நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட முழுமையாக பெண் அலுவலா்கள் பணியாற்றும் இளஞ்சிவப்பு நிற வாக்குச்சாவடி மையம் ஆகியவற்றைப் பாா்வையிட்டாா். பின்னா், விருதுநகா் மாவட்டத்தில் தகுதியுள்ள அனைத்து வாக்காளா்களும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி, மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை எட்ட முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தாா்.
தொடர்புடையது

தூத்துக்குடி மாவட்ட வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி: ஆட்சியா் ஆய்வு

வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடக்கம்: ஆட்சியா் ஆய்வு

தோ்தல் பாா்வையாளா்கள் தலைமையில் வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமனம்

நாகா்கோவில் தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


