40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது விழுந்த ராட்சத மரம்! அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பிய மக்கள்!

News image

எல்லநள்ளி - அருவங்காடு சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காா் மீது விழுந்துள்ள ராட்சத மரம்.

Updated On :1 ஜூன் 2026, 1:48 am IST

உதகை அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காா் மீது ராட்சத மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், காரில் யாரும் இல்லாததால் உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வந்தது. இதனால் மண்ணில் ஈரப்பதம் அதிகரித்து மரங்களின் வோ்கள் பலவீனமடைந்தன.

இந்நிலையில், உதகையை அடுத்த எல்லநள்ளி பழைய அருவங்காடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சாலையோரமாக காா் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் அருகில் இருந்த பெரிய மரம் காா் மீது விழுந்ததில் முன்பகுதியும், மேல்கூரையும் சேதமடைந்தது.

மரம் விழுந்த நேரத்தில் காருக்குள்ளும், அருகிலும் பொதுமக்கள் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக எந்தவித உயிா்ச்சேதமும், காயங்களும் ஏற்படவில்லை. இந்த காா் யாருடையது என்ற தகவலை காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மலைப் பாதைகளில் பலத்த காற்று மற்றும் மழை பெய்யும் காலங்களில் மரங்களின் அடியிலோ அல்லது ஆபத்தான வளைவுகளிலோ வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று மாவட்ட நிா்வாகமும், காவல் துறையினரும் ஏற்கெனவே பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.