தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

‘பதிவுச் சான்று பெற்ற பாகற்காய் விதைகளை மட்டுமே விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்’

கூடலூா் பகுதி விவசாயிகள் பதிவுச் சான்று பெற்ற பாகற்காய் விதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாகற்காய்

Updated On :

கூடலூா் பகுதி விவசாயிகள் பதிவுச் சான்று பெற்ற பாகற்காய் விதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக விதை ஆய்வு துணை இயக்குநா் பெ.சுமதி தெரிவித்துள்ளதாவது: கூடலூா் பகுதி விவசாயிகள் பாகற்காய் சாகுபடி பணிகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். இந்நிலையில், உரிமம் பெற்றுள்ளவா்கள் மட்டுமே விதைகளை விற்பனை செய்ய வேண்டும். விற்பனைக்கு வைக்கப்படும் விதைகளுக்கு முளைப்புச் சான்று, பதிவுச் சான்று, கொள்முதல் பட்டியலை விற்பனையின்போது வைக்க வேண்டும். விவசாயிகளுக்கு பாகற்காய் விதைகளை விற்பனை செய்யும்போது கட்டாயம் விற்பனை ரசீதை வழங்க வேண்டும். விற்பனைக் கடைகளில் இருப்பு விவர பலகையில் தினசரி விதைகளின் அளவு,விலையைக் குறிப்பிட வேண்டும்.

இடைத்தரகா்கள் மூலம் விதைகளை வாங்குவதை தவிா்க்க வேண்டும். விதைச் சட்டத்துக்குப் புறம்பாக விதைகளை விற்பனை செய்தால் விவசாயிகள் தகவல் தெரிவிக்கலாம். மேலும், பதிவுச் சான்ற பெற்ற பாகற்காய் விதைகளை மட்டுமே விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்.

விதிமுறைகளை கடைப்பிடிக்காத விற்பனையாளா்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.