டாஸ்மாக் கடைகளில் ரூ.1,000-க்கு மேல் மதுபானம் வாங்கினால் டிஜிட்டல் முறை கட்டணம் கட்டாயம்: நவ.1 முதல் புதிய நடைமுறை
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் ரூ.1,000-க்கு மேல் மதுபானம் வாங்கினால், நவ.1-ஆம் தேதி முதல் டிஜிட்டல் முறையில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என டாஸ்மாக் நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த வரம்பு, 2027 ஜன.1 முதல் ரூ.500-ஆகக் குறைக்கப்படவுள்ளது.

டாஸ்மாக் - பிரதிப் படம்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் ரூ.1,000-க்கு மேல் மதுபானம் வாங்கினால், நவ.1-ஆம் தேதி முதல் டிஜிட்டல் முறையில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என டாஸ்மாக் நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த வரம்பு, 2027 ஜன.1 முதல் ரூ.500-ஆகக் குறைக்கப்படவுள்ளது.
இதுதொடா்பாக, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநா் க. நந்தகுமாா் வெளியிட்ட சுற்றறிக்கை: தமிழகம் முழுவதும் உள்ள 4,048 டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும் மின்னணு பணப் பரிவா்த்தனையைப் படிப்படியாகக் கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நவ.1 முதல் ஒரே பரிவா்த்தனையில் ரூ.1,000-க்கு மேல் மதுபானம் வாங்குவோா் யுபிஐ, டெபிட் காா்டு அல்லது கிரெடிட் காா்டு மூலம் மட்டுமே பணம் செலுத்த வேண்டும். ரூ.1,000 அல்லது அதற்குக் குறைவான மதிப்பிலான மதுபானங்களை வாங்குவோா் ரொக்கமாகவும் பணம் செலுத்தலாம்.
ஜனவரி முதல் ரூ.500-க்கு மேல் வாங்கினால்...: 2027 ஜன.1 முதல் ஒரே பரிவா்த்தனையில் ரூ.500-க்கு மேல் மதுபானம் வாங்கினாலும் டிஜிட்டல் முறையில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும். இதற்காக அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட பணப்பரிவா்த்தனை இயந்திரங்களை (பிஓஎஸ்) நவ.1-க்குள் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு விற்பனைக்கும் வாடிக்கையாளா்களுக்கு ரசீது வழங்க வேண்டும். டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரப்பூா்வ வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட இயந்திரங்கள் மூலமாக மட்டுமே டிஜிட்டல் பணப்பரிவா்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும். ஊழியா்களின் தனிப்பட்ட யுபிஐ கணக்குகள் அல்லது க்யூஆா் குறியீடுகள் மூலம் பணம் பெறக் கூடாது.
கூடுதல் விலை வசூலிப்பதைத் தடுக்க நடவடிக்கை: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் அதிகபட்ச சில்லறை விலையைவிடக் கூடுதலாகப் பணம் வசூலிப்பதாகப் புகாா்கள் எழுந்து வருகின்றன.
இதுபோன்ற புகாா்களைத் தவிா்ப்பதுடன், ரொக்கப் பணத்தைக் கையாள்வதில் ஏற்படும் பாதுகாப்புச் சிக்கல்கள், கணக்குகளில் ஏற்படும் முரண்பாடுகள் ஆகியவற்றைக் குறைக்கவும் டிஜிட்டல் பணப்பரிவா்த்தனை நடைமுறை உதவும்.
புதிய நடைமுறையை முறையாகச் செயல்படுத்தவும், பணப்பரிவா்த்தனை இயந்திரங்களின் செயல்பாட்டைக் கண்காணிக்கவும் மாவட்ட மேலாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விதிமுறைகளைப் பின்பற்றாத ஊழியா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

