டாஸ்மாக் மதுபானம் கடத்தியவா் கைது
ஆம்பூா் அருகே டாஸ்மாக் மதுபான பாட்டில்களை கடத்தியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கைது - பிரதிப் படம்
ஆம்பூா் அருகே டாஸ்மாக் மதுபான பாட்டில்களை கடத்தியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
நரியம்பட்டு கிராமத்தில் உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.
அதில் டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் கடத்திச் செல்வது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்தனா். மேலும் வழக்கு பதிந்து மதுபான பாட்டில்களை கடத்திச் சென்ற பெரியவெங்கடசமுத்திரம் கிராமத்தை சோ்ந்த சந்தோஷ் (28) என்பவரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




