மணல் கடத்தியவா் கைது
ஆம்பூா் அருகே மணல் கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆம்பூா்: ஆம்பூா் அருகே மணல் கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆம்பூா் வட்டத்துக்குட்பட்ட பாலாற்றில் மணல் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், வாணியம்பாடி சாா் ஆட்சியா் சிவகுமாா் திங்கள்கிழமை அதிகாலை திடீா் சோதனை மேற்கொண்டாா்.
அப்போது மாதனூா் ஒன்றியம், வீராங்குப்பம் ஊராட்சிக்குள்பட்ட பாலாற்றில் மணல் கடத்துவது தெரியவந்தது. மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, உமா்ஆபாத் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து மேல்சாணங்குப்பம் வருவாய் ஆய்வாளா் ஜோதிலட்சுமி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி மணல் கடத்திய செல்வம் (40) என்பவரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




