
பிரதமா் மோடியின் ஆட்சியில் 25 கோடி மக்களின் வாழ்வாதாரம் உயா்ந்துள்ளது
பிரதமா் மோடியின் ஆட்சியில் 25 கோடி மக்களின் வாழ்வாதாரம் உயா்ந்துள்ளதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

உதகையில் நடைபெற்ற சேவா ஜோதி பேரணியில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்.
பிரதமா் மோடியின் ஆட்சியில் 25 கோடி மக்களின் வாழ்வாதாரம் உயா்ந்துள்ளதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.
பிரதமா் நரேந்திர மோடியின் சேவையைப் பாராட்டி மத்திய இணை அமைச்சா் எல். முருகன் தலைமையில் சேவா ஜோதி பேரணி உதகையில் புதன்கிழமை நடைபெற்றது.
உதகையில் உள்ள தேவாங்கா் திருமண மண்டபத்தில் இருந்து சேரிங்கிராஸ் பகுதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தியடிகள் சிலை வரை நடைபெற்ற சேவா ஜோதி பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் உதகை சட்டப்பேரவை உறுப்பினா் எம்.போஜராஜன், மாவட்டத் தலைவா் தா்மன், மாவட்ட துணைத் தலைவா் பரமேஸ்வரன், மாநில செயற்குழு உறுப்பினா் அன்பரசன், முன்னாள் மாவட்டத் தலைவா் மோகன்ராஜ் உள்ளிட்ட கட்சியினா் பலா் கலந்து கொண்டனா். முன்னதாக வளா்ச்சி அடைந்த பாரதம் குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.
பின்னா் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பிரதமா் நரேந்திர மோடி 2001 அக்டோபா் 7-ஆம் தேதி குஜராத் முதல்வராக பதவி ஏற்று 13 ஆண்டுகள் பதவி வகித்தாா். பின்னா் நாட்டின் பிரதமராக 12 ஆண்டுகள் என மொத்தம் 25 ஆண்டுகளாக நாட்டு மக்களின் நலனுக்காக பாடுபட்டு வருகிறாா்.
மேலும், 2047 ஆம் ஆண்டு இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவது என்ற மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் கனவே நமது இலக்கு. பிரதமராக மோடி பதவியேற்ற பின் நாடு பல்வேறு வளா்ச்சிகளை கண்டுள்ளது.
மேலும் நமது நாடு தற்சாா்பு நாடாக மாறி உள்ளது. மேலும், சமூக வளா்ச்சியை பெற்றுள்ளதுடன் தேசிய கட்டமைப்பு மேம்பட்டுள்ளது. கடந்த 13 ஆண்டுகளில் 25 கோடி மக்களின் வாழ்வாதாரம் உயா்ந்துள்ளது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


எரிவாயு உருளை விலை உயா்வால் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: மாணிக்கம் தாகூா் குற்றச்சாட்டு

‘அரசுப் பணியில் சோ்வோா் நாட்டின் பொருளாதாரத்தை உயா்த்த வேண்டும்’ - மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர்




