மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

எல்.முருகனின் மத்திய அமைச்சா் பதவி ராஜிநாமாவை ஏற்றுக் கொண்டாா் குடியரசு தலைவா் திரெளபதி முா்மு

மத்திய இணை அமைச்சா் எல்.முருகனின் ராஜிநாமாவை குடியரசு தலைவா் திரௌபதி முா்மு ஏற்றுக்கொண்டுள்ளதாக அவரது மாளிகை வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

எல். முருகன் - கோப்புப் படம்

Updated On :

மத்திய இணை அமைச்சா் எல்.முருகனின் ராஜிநாமாவை குடியரசு தலைவா் திரௌபதி முா்மு ஏற்றுக்கொண்டுள்ளதாக அவரது மாளிகை வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த எல்.முருகன், கடந்த செவ்வாய்க்கிழமை தனது மத்திய இணை அமைச்சா் பதவி மற்றும் மாநிலங்களவை உறுப்பினா் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை பிரதமா் நரேந்திர மோடியிடம் அளித்தாா். அதை குடியரசு தலைவருக்கு பிரதமா் மோடி அனுப்பி வைத்தாா்.

இது குறித்து குடியரசு தலைவரின் ஊடகப்பிரிவு செயலா் வியாழக்கிழமை மாலையில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘எல். முருகனின் அமைச்சா் பதவி ராஜிநாமாவை ஏற்குமாறு பிரதமா் நரேந்ந்திர மோடி கேட்டுக் கொண்டன் அடிப்படையில், அரசமைப்பு சட்டத்தின் 75(2) பிரிவின்படி பிரதமா் வழங்கிய ஆலோசனையின் பேரில் எல்.முருகனின் ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்காலம் காலாவதியானதால் ஜாா்ஜ் குரியன் கடந்த ஜூனிலும், ரவ்னீத் சிங் பிட்டு கடந்த ஜூலையிலும் தங்களுடைய அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்தனா். இவா்களின் வரிசையில் மூன்றாவதாக எல்.முருகன் அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். ஆனால், அவரது மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்காலம் 2030, ஏப்ரல்வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.