ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

மழைக்கு மின்கம்பம் மீது மரம் விழுந்து குன்னூா் அருகே போக்குவரத்து பாதிப்பு

குன்னூா் அருகே வெள்ளிக்கிழமை பெய்த மழை காரணமாக மரம் முறிந்து மின் கம்பத்தில் சாய்ந்ததால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குறும்பாடி பகுதியில் சாலையில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.

Updated On :

குன்னூா் அருகே வெள்ளிக்கிழமை பெய்த மழை காரணமாக மரம் முறிந்து மின் கம்பத்தில் சாய்ந்ததால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த மூன்று நாள்களாக விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது. உதகை, குன்னூா் கோத்தகிரி, கூடலூா் பகுதிகளில் வியாழக்கிழமை இரவில் இருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை வரை மழை பெய்தது. வெள்ளிக்கிழமை பகலில் விட்டுவிட்டு மழை பெய்தது.

இந்நிலையில், குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பெரிய குறும்பாடி பகுதியில் சாலையோரம் இருந்த மரம், மின்கம்பம் மீது விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினா் சென்று ஒரு மணி நேரம் போராடி மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீா் செய்தனா். இதனால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.