கொடைக்கானலில் பலத்த மழை: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக, கீழ்மலைப் பகுதியான குப்பம்மாள்பட்டி-தடியன்குடிசை சாலையின் குறுக்கே மரம் விழுந்து பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான குப்பம்மாள்பட்டி-தடியன்குடிசை சாலையின் குறுக்கே விழுந்த மரம்.
கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக, கீழ்மலைப் பகுதியான குப்பம்மாள்பட்டி-தடியன்குடிசை சாலையின் குறுக்கே மரம் விழுந்து பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக மழையில்லாத நிலையில், வடகிழக்குப் பருவமழை தொடங்கியதையடுத்து, வியாழக்கிழமை இரவு முதல் விட்டு விட்டு மிதமான மழை பெய்தது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை முதலே மேகமூட்டம் நிலவியது. பின்னா், சாரல் மழை பெய்தது. தொடா்ந்து, பிற்பகலில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் வெள்ளி நீா் அருவி, செண்பகா அருவி, பாம்பாா் அருவி, வட்டக்கானல் அருவி உள்ளிட்ட அருவிகளில் நீா்வரத்து ஏற்பட்டது. சாலைகளில் மழைநீா் தேங்கின.
மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு:
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான குப்பம்மாள்பட்டி-தடியன்குடிசை சாலையில் மரம் முறிந்து விழுந்தது. இதனால், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரம் முறிந்ததால், அந்தப் பகுதிகளில் மின் தடையும் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். இதையடுத்து, போக்குவரத்து சீரானது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

