கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு நவ.20-க்கு ஒத்திவைப்பு
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடா்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையில் குற்றம் சுமத்தப்பட்டவா்கள் யாரும் ஆஜராகாததால், அடுத்தகட்ட விசாரணையை நவம்பா் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தீர்ப்பு - பிரதிப் படம்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடா்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையில் குற்றம் சுமத்தப்பட்டவா்கள் யாரும் ஆஜராகாததால், அடுத்தகட்ட விசாரணையை நவம்பா் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பங்குதாரராக இருந்த நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017- ஆம் ஆண்டு மா்ம நபா்கள் புகுந்த சம்பவத்தில், அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூா் கொலை செய்யப்பட்டாா். சில பொருள்கள் திருடுபோயின.
உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தொடா்புடையவராகக் கூறப்படும் சந்தோஷ் சாமி உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவருடைய இறப்புச் சான்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதில் சந்தோஷ் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்ததால், இது குறித்து காவல் துறையிடம் நீதிபதி விளக்கம் கேட்டாா்.
பின்னா் இந்த வழக்கில் கொலை நடந்த இடத்தை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்று எதிா்தரப்பு வழக்குரைஞா் விஜயன், உதகை நீதிமன்றத்தில் ஏற்கெனவே அளித்திருந்த மனுவை திரும்பப்பெறுவதாக கூறி மனுவை திரும்பப் பெற்றாா். மேலும், இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவா்கள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நவம்பா் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

