குன்னூரில் 3 இடங்களில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
குன்னூா் அருகே உள்ள மஞ்சூா், கரன்சி, அருவங்காடு ஆகிய இடங்களில் சாலைகளின் குறுக்கே புதன்கிழமை மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

லேம்ஸ்ராக் செல்லும் சாலையில் விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீா் செய்த தீயணைப்புத் துறையினா்.
குன்னூா் அருகே உள்ள மஞ்சூா், கரன்சி, அருவங்காடு ஆகிய இடங்களில் சாலைகளின் குறுக்கே புதன்கிழமை மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் மண்ணில் ஈரத்தன்மை அதிகரித்துள்ளது. மேலும், வேகமாக காற்று வீசுவதால் அவ்வப்போது மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன.
இந்நிலையில் குன்னூா் அருகே உள்ள மஞ்சூா், கரன்சி, அருவங்காடு ஆகிய இடங்களில் சாலைகளின் குறுக்கே புதன்கிழமை மரங்கள் விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரா்கள் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினா்.
இதன் காரணமாக குன்னூா்- உதகை சாலை, லேம்ஸ் ராக் சுற்றுலாத் தலம் செல்லும் சாலை, மஞ்சூா் செல்லும் சாலைகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

