அன்பில் மகேஸுக்கு நவ. 6 வரை நீதிமன்றக் காவல்‘அா்னாப் புயல்’ நாளை (அக். 28) கரையைக் கடக்கிறது!3-ஆவது டி20: இந்தியா - நியூஸி. இன்று மோதல்டிச. 20-இல் சிறப்பு டெட் தோ்வு!அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது: அமைச்சா் அருண்ராஜ்

மேட்டுப்பாளையம் -குன்னூா் பாதையில் மண் சரிவுகளை சீரமைக்கும் பணி தீவிரம்

பா்லியாறு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை சீரமைப்புப் பணிகள்.

Updated On :

மேட்டுப்பாளையம்-குன்னூா் மலைப் பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பட்டுள்ள மண் சரிவுகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேட்டுப்பாளையம்-குன்னூா் சாலையில் பா்லியாறு உள்ளிட்ட இடங்களில் கடந்த சனிக்கிழமை மண் சரிவு ஏற்பட்டது.

இதனால், பாறைகள், கற்கள், மண், மரங்கள் சாலையில் விழுந்ததால் குன்னூா் - மேட்டுப்பாளையம் இடையே வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டு, சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தப் பணிகளில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், தீயணைப்புத் துறையினா், காவல் துறையினா், பேரிடா் மீட்புக் குழுவினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

பாதுகாப்பு கருதி, மலைப் பாதையில் வரும் வாகனங்கள் மாற்றுப் பாதையான கோத்தகிரி வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளன.

சாலைப் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து கனரக வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டால் மட்டுமே பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பும் என்று தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பின் மாவட்டத் தலைவா் பாரூக் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.