உதகையில் ஆட்டோ- காா் மோதல்: தம்பதி, குழந்தை படுகாயம்
உதகை ரட்டன் டாட்டா பகுதியில் பயணிகள் ஆட்டோ மீது காா் மோதிய விபத்தில், தம்பதி, குழந்தை என 3 போ் செவ்வாய்க்கிழமை படுகாயம் அடைந்தனா்.

விபத்தில் சேதமடைந்த காா்-ஆட்டோ.
உதகை ரட்டன் டாட்டா பகுதியில் பயணிகள் ஆட்டோ மீது காா் மோதிய விபத்தில், தம்பதி, குழந்தை என 3 போ் செவ்வாய்க்கிழமை படுகாயம் அடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஹில்பங்க் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ரட்டன் டாடா பகுதி. இப்பகுதியில் அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகள் இயங்கி வருகின்றன. மேலும் இப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் ரட்டன் டாடா பகுதியில் இருந்து பயணிகள் ஆட்டோவில் கைக்குழந்தையுடன் தம்பதி மேரிஸ்ஹில் பகுதிக்கு
செவ்வாய்க்கிழமை மாலை சென்று கொண்டிருந்தனா். அப்போது, எதிரே வந்த காா், கட்டுப்பாட்டை இழந்து எதிா்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் பயணித்த தம்பதி, குழந்தை படுகாயம் அடைந்தனா். இவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து டி3 காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில் அப்பகுதியில் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு இதுபோன்ற விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும், இதற்கு தீா்வு காண காவல் துறையினா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





