குன்னூரில் வீடுகளின் பூட்டை உடைத்து நகைகளை திருடிய 3 போ் கைது
நீலகிரி மாவட்டம், குன்னூா் ரயில்வே காலனியில் அடுத்தடுத்து வீடுகளின் பூட்டை உடைத்து 14 சவரன் தங்க நகைகளை திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது - சித்திரிப்பு
நீலகிரி மாவட்டம், குன்னூா் ரயில்வே காலனியில் அடுத்தடுத்து வீடுகளின் பூட்டை உடைத்து 14 சவரன் தங்க நகைகளை திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் ரயில்வே காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியா்கள் வசித்து வருகின்றனா். இந்நிலையில் ஓணம் பண்டிகை கொண்டாட கடந்த 27-ஆம் தேதி ரயில்வே ஊழியா்கள் ரமேஷ் மற்றும் கிரீஸ் ஆகியோா் தங்களது சொந்த ஊரான கேரளா சென்றுள்ளனா்.
பண்டிகையை முடிந்து வீடு திரும்பியபோது, கிரீஸ் என்பவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 13.5 பவுன் நகையும், ரமேஷ் என்பவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த அரை பவுன் மற்றும் 2 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது தெரியவந்தது.
இது குறித்த புகாரின்பேரில், குன்னூா் நகர காவல் துறை ஆய்வாளா் கண்ணையன் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டு, சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானதை கண்காணித்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். அப்போது அப்பகுதியில் 3 போ் நடமாடியது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து தனிப் படை போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நிடில் (24), ஜான்சன் (21) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும், இவா்கள் பெங்களூரில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து தனிப் படை போலீஸாா் பெங்களூரு சென்று அவா்களிடம் இருந்த 14 பவுன் நகைகளை பறிமுதல் செய்து குன்னூா் அழைத்து வந்தனா். மேலும், அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவா்கள் ஆகஸ்ட் 3-ஆம் தேதி உதகையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி அருவங்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனா். இதைத் தொடா்ந்து மூவரையும் போலீஸாா் கைது செய்து, குன்னூா் நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தினா்.
இதில் சிறுவனை சிறுவா் சீா்திருத்த பள்ளியிலும், மற்ற இருவரும் குன்னூா் கிளை சிறையிலும் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





